விமல் வீரவன்ஸவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா பதில்!
இலங்கைக்கு வருகை தந்திருந்த ஆறு அமெரிக்கர்கள் பாதுகாப்புத் தரப்பினரின் சோதனைகளை புறக்கணித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா பதிலளித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கியுள்ள அமெரிக்கத் தூதரகம், அனைத்து தூதரக பணியாளர்கள் மற்றும் அதிகாரபூர்வ விருந்தினர்களும், வியன்னா பிரகடனத்துக்கு அமைவாக, இலங்கையின் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு இணங்கிச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு, குறித்த தனியார் ஹொட்டலில் நடைபெற்ற ஒரு தவறான புரிந்துணர்வு தொடர்பாக தாங்கள் அறிவதாகவும், இந்த விவகாரம் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் எமது பாதுகாப்பு அதிகாரிகள் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் பணியாற்றுகிறார்கள் என்றும் அவர்களுக்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்க தாங்கள் கடமைப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக விமல் விரவன்ஸ் முன்னர் குறிப்பிடுகையில், “நாம் கடந்த காலங்களில் தகவலொன்றை வெளியிட்டிருந்தோம். அதாவது அமெரிக்க இராணுவத்தினர் என சந்தேகிக்கப்படும் 6 பேர் தனியார் விடுதியொன்றுக்கு வந்திருந்தார்கள்.
இதன்போது பயணப் பையை பரிசோதிக்க, பாதுகாப்புத் தரப்பினருக்கு அவர்கள் அனுமதியளிக்கவில்லை. இதனையடுத்து, இவர்கள் அமெரிக்கத் தூதரக வாகமொன்றில் ஏறிச் சென்றுள்ளனர்.
இதனை நாம் வெளிப்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்கத் தூதரகமும் அதனை தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. இது சாதாரண ஒரு விடயமாக நாம் கருதவில்லை. குறித்த பயணப் பைகளை அவர்கள் ஏன் பரிசோதனை செய்ய ஒத்துழைக்கவில்லை என்ற உண்மையை அமெரிக்கத் தூதரகம் வெளிப்படுத்த வேண்டும்.
அத்தோடு, அந்த பைகள் தற்போது எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பதையும் கூறவேண்டும். அதேநேரம், இவ்வாறான ஒரு பாரிய சம்பவத்தை நாம் வெளிப்படுத்தியுள்ள போதிலும், இந்த அரசாங்கம் இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
குறைந்தபட்சம், இந்த சம்பவம் தொடர்பாக தேடிப்பார்ப்பதாகக் கூடி ஒரு அறிக்கையை அரசாங்கத் தரப்பு வெளிப்படுத்தவில்லை. அரசாங்கம் சோபா உடன்படிக்கையில் கைச்சாத்திடும் முன்னரே, அமெரிக்கா அதன் வரப்பிரசாதங்களை தற்போது அனுபவிக்க ஆரம்பித்துவிட்டது.
எமக்குத் தெரிந்தவகையில், இந்த அமெரிக்கர்கள் இதற்கு முன்னரும் இலங்கைக்கு வந்து இரண்டு வாரங்கள் வரை தங்கியிருந்துவிட்டுச் சென்றுள்ளார்கள். இவர்கள் ஏன் வந்தார்கள் என்று இதுவரை தெரியவில்லை. அவர்களது பைகளில் என்ன உள்ளது? அந்தப் பைகள் யாரிடம் கையளிக்கப்படுகிறது என்றும் அரசாங்கம் ஆராயவில்லை.
இது நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயமாகும். எம்மைப் பொறுத்தவரை தேசிய பாதுகாப்பை முற்றிலுமாக தவறவிட்டுள்ள ஓர் அரசாங்கமாகவே இது காணப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்தே அமெரிக்க தூதரகம் தற்போது பதிலளித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை