40 நொடிகளுக்கு ஒருவர் தற்கொலை – உலக சுகாதார நிறுவனம்!!

உலகளாவிய ரீதியாக 40 நொடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நிகழும் தற்கொலை சம்பவங்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் நேற்று (திங்கட்கிழமை) ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அதில் 2010 ஆம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை நடந்த தற்கொலைகள் பற்றி புள்ளிவிபரங்கள் வௌியிடப்பட்டுள்ளன.

அதன்படி 40 நொடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்கின்றார் எனவும், பொதுவாக இவர்களில் கழுத்தில் சுருக்கிட்டும், துப்பாக்கியால் சுட்டும், வி‌ஷம் அருந்தியும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இத்தகைய தற்கொலை சம்பவங்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களிலேயே இடம்பெறுகின்றன. பெரும்பாலான தற்கொலைகள், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் நிகழ்கின்றன.


இலங்கை, லுமுவேனியா, லெசோதோ, உகாண்டா, தென்கொரியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் அதிக தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. இங்கு 1 லட்சம் பேருக்கு 13.7 சதவீதம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.


பொதுவாக அனைத்து நாடுகளிலும் பெண்களை விட ஆண்கள்தான் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.


அதே நேரத்தில் பங்களாதேஷ், சீனா, லெகோதோ, மொராக்கோ மற்றும் மியான்மரில் தற்கொலை செய்பவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவர்களில் இளம் வயதினர் அதிக அளவில் உள்ளனர். மொத்தத்தில் தற்கொலை செய்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 45 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர்.


இவர்களுக்கு அடுத்த படியாக தற்கொலை செய்பவர்கள் பட்டியலில் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர். இவை தவிர வீதி விபத்துகளிலும் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.


மொத்தத்தில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது கொலை மற்றும் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களை விட அதிகம் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.


ஒவ்வொரு மரணமும், சம்பந்தப்பட்ட குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தக் கூடியவை. எனவே தற்கொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். எனவே உலக நாடுகள் அதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.


தேசிய சுகாதாரம் மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கல்வி திட்டங்களை உருவாக்க வேண்டும். இத்தகவலை உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ரெட்ரோஸ் அதானம் கெப்ரியசிஸ் (Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Powered by Blogger.