காலமென்னும் பெரு நதியில் கரைந்துபோகாத மாவீரன்.!

இவன் பெயரை தவிர்த்த உரிமைப்போராட்டங்கள் இனியொருபோதும் சாத்தியமில்லை.!


ஒப்பற்ற இவன் தியாகம் வீண்போனதான கதைகளை பேசும் மாந்தர்கள் உனையும், உன் தியாகத்தின் மேன்மையினையும் ஒரு நாள் புரிந்துகொள்வர்.!

தமிழினத்தின் வரலாற்றுப்பொக்கிஷம் திலீபன்.!

தமிழினத்தின் உயிர்மூச்சாக இழையோடிக்கொண்டிருக்கும் உரிமைப்பசியின் விதை தீலிபன் நாட்டியது.!

காலவரம்பிற்குள் அடங்காத தமிழினவிடுதலையினை நோக்கி நகரும் கால்களிற்கான பலத்தை உன் ஆன்மாவிலிருந்து தமிழினம் பெற்றுக்கொள்ளும்.!

உனக்காக தமிழினம் சிந்த ஆரம்பித்த கண்ணீர் இன்றுவரை நின்றபாடில்லை.!
நீ நேசித்த தமிழினவிடுதலைக் காலம்வரை சிந்தும் கண்ணீரையும் தாண்டி, தமிழினம் தன் உரிமைப்போரை தொடரும்.!

ஒவ்வொரு உயிர்க்கலத்திலும் உயர்வலி தாங்கி,
உன் உடல் சாய்ந்த வரலாற்றை தமிழினம் தன் சந்ததிகளுக்கு கடத்திக்கொண்டேயிருக்கும்.!

தீலிப வரலாறு , தமிழினம் என்னும் உடலின் இதயம் என்றால் அது மிகையில்லை.!
Powered by Blogger.