எழுக தமிழ் மக்களுக்கான விழிப்பியல் !

எழுக தமிழை குழப்ப நினைக்கும் அனைவருக்கும் எச்சரிக்கை!

எழுக தமிழை வைத்து மக்கள் பேரவை தமக்கு சாதகமாக காய் நகர்த்துவதாக குறைகூறிக்கொண்டு இருப்பவர்கள் அநேகமாக சிங்கள அரசியல் கட்சியை சேர்ந்தவர்களே .
எழுக தமிழில் தாம் முழுமூச்சாக ஈடுபடும்போது எந்தவிதமான குற்றங்களையும் சுமத்தாத குறித்த அமைப்பு இப்போது திட்டமிட்டே பல போலியான செய்திகளை கொண்டு செல்கின்றது .

விக்கி ஐயாமீது குற்றம் சாட்டுவதும் மக்கள் பேரவையை முழுமையாக தவறாக சித்தரிக்க முனைவதும் சிங்கள அரசியல்வாதிகளுக்கு முண்டு கொடுக்கும் கட்சியின் முக்கிய நோக்கமாக உள்ளது .மக்கள் பேரவையை வலுவிழக்கச்செய்யவேண்டும் என்ற எண்ணம் யாருக்கு இருக்கின்றது?

இதற்கான காரணம் என்ன ?
மக்கள் பேரவை செல்வாக்கு பெற்று தமிழ் மக்களுக்கான தீர்வு எட்டப்படுமாயின் ஈழ அரசியலை வைத்து வியாபாரம் செய்யும் அனைத்து துறைகளும் முடங்கிவிடும் என்று எண்ணியே மக்கள் பேரவையை முழுமையாக முடக்க தமிழ் அரசியல் கட்சிகள்/ சிங்கள அரசியல் கட்சிகள்/முஸ்லீம் அரசியல் கட்சிகள்/ வியாபார நிறுவனங்கள்/ ஊடகங்கள் என அனைத்து துறையும் விரும்புகின்றது .
மக்களின் நலம் நாடி நிற்கும் அமைப்புகளாக இருந்தால் நிச்சயமாக எமக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பை நழுவ விடாது தமிழர்களுக்கான தீர்வுத்திட்டத்தை சரியாக எடுத்து சென்று சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு சாவுமணி அடிக்க ஒவ்வொரு தமிழ் கட்சிகளும் முன்வருவார்கள் .

மக்கள் பேரவையில் தவறுகள் இருப்பின் அவற்றை தெளிவாக கூறிட வேண்டும். தகுந்த ஆதாரங்களை வழங்க வேண்டும் .அதனை விடுத்து மக்கள் பேரவை ஒரு கட்சியாக பதிவுசெய்யப்படாமல் எந்த ஒரு குழுவினருடனும் கூட்டணி சேராமல் இருக்கும்போதே குறித்த ஒரு அமைப்பை குற்றவாளி ஆக்கி எமக்கு வரும் தீர்மானத்தை பூரணமாக முடக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் .

மக்கள் பேரவையில் தவறு இருப்பின் அவற்றை திருத்தி சரியாக வழிநடக்க ஒற்றை தலைமையின் கீழ் செயற்படவேண்டுமே தவிர ஆளுக்கொரு மூலையில் நின்றுகொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதல்ல .
இறுதியாகவும் உறுதியாகவும் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்படும் எழுக தமிழ் பூரண வெற்றி பெரும் .ஏனென்னில் எழுக தமிழ் எமது எமது மாவீரர்களின் கனவை கொண்டு நடைபயிலும் ஒரு கட்டளை .
எழுக தமிழின் பின்னர் வரும் தேர்தலில் எமது முடிவும் தமிழ்மக்களுக்கான தீர்வும் கிடைக்கும் என்பது வெளிப்படை .

இறுதியாக நீங்கள் என்னவிதமான குற்றத்தை மக்கள் பேரவைமீது கூறினாலும் எதிர்காலத்தில் அதனை மாற்றி சரியான வழியில் பயணிக்க நீங்கள் ஒவ்வொருவரும் ஆலோசனை வழங்குங்கள் .வரும் நாட்களில் மக்கள் பேரவையை வலுப்படுத்தவேண்டுமே தவிர குறைசொல்லி எமக்கான இறுதி இருப்பையும் அழிக்க வேண்டாம் .அவ்வாறு நீங்கள் நினைத்து செயற்படுவீர்களாக இருந்தால் தவறிழைத்த அனைவரும் அதற்கான தண்டனையை அனுபவிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை .

எல்லாளன் படை
வடக்கு கிழக்கு மாகாணம்
10/09/19

Powered by Blogger.