ரூபவாஹினி விவகாரம் ஊடக சுதந்திரத்துகான அச்சுறுத்தல்-ருவான்!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை எவ்வித முன்னறிவித்தலுமின்றி பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டமையானது ஊடக சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என எடுத்துக் கொள்ளலாம் என ஊடகத்துறை அமைச்சர் ருவான் விஜேவர்தன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் அந்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் தற்போதுள்ள திறமையற்ற தலைவரை மாற்றி தகுதிவாய்ந்த ஒருவரை நியமிக்க நான் பலமுறை முயன்றபோதும் அதனை ஜனாதிபதியே தடுத்தார்.

கணக்காய்வு அறிக்கைகளின்படி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மாதமொன்றுக்கு ரூபா 60 மில்லியனை இழக்கிறது. இதனால் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தொலைக்காட்சி தரவரிசை ஆறாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது தலைவியாக உள்ளவரின் நிர்வாக திறனின்மையை இது தெளிவாக காட்டுகின்றது. இதனை ஊழியர்களே உறுதிப்படுத்துவார்கள்.

நிலைமை இவ்வாறு இருக்கும்போது ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை அசாதாராண வர்த்தமானி மூலம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதான அறிவிப்பு ஒரு சிக்கலான சூழ்நிலையை தோற்றுவித்துள்ளதாகவே தெரிகிறது.

போர்க்காலத்தில் கூட ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவில்லை. எனவே இந்த செயற்பாடு இலங்கையில் ஊடக சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என விளக்குவதை தவிர வேறெதுவாகவும் இருக்கமுடியாது.

ஒரு உயர்தரமான ஊடக கலாசாரத்தை உருவாக்க எதிர்பார்க்கும் நீங்கள், வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு, அதற்குப் பொறுப்பான அமைச்சரான எனக்கு அதனை தெரிவிக்கத் தவறிவிட்டீர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.