யாழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது!

யாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப் பயன்படுத்துபவர் கண்டறியப்பட்டார்.

இந்நிலையில் அவரை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்த நிலையில் குறித்த நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மற்றைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இருவரும் 19 மற்றும் 20 வயதுடையவர்கள் என்றும் இருவரும் அவர்கள் கோப்பாயைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேகநபர்களிடமிருந்து 10 அலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கந்தர்மடம் பலாலி வீதியின் ஆலடிப் பகுதியில் அமைந்துள்ள அலைபேசி விற்பனை நிலையத்திற்குள் கடந்த 31ஆம் திகதி கதவுடைத்து உட்புகுந்த திருடர்கள் விலை உயர்ந்த 18 அலைபேசிகளை திருடிச் சென்றிருந்தனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் ,விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கேமராக்களை ஆராய்ந்தபோது முகத்தினை துணியால் மூடிக் கட்டியபடி திருடர்கள் உள்நுழைந்தமை தெரியவந்தது.

அத்துடன் திருடன் ஒருவன் அங்கிருந்து வெளியேறும் சமயம் கைவிரல் அடையாளம் கண்டு கொள்ளமுடியாதவாறு ஓர் துணியினால் தாம் கையாண்ட பொருள்கள் மற்றும் இடங்கள் அனைத்தையும் சுத்தம் செய்தமை சிசிரிவி பதிவில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.