தீபமே...எம் திலீபமே....கவிதை!!

நிமிடங்கள் பேசும்
இது  திலீபனின் காலம்
மேகங்கள் கூடும் - அவன்
தீரத்தைப் பாடும்.


வலிகள் சேரவே
எடையும் கூடுதே
உள்ளமே.

அது காலம்
காலமாய்
திலீபன் புகழைத்தான்
பாடுமே...

மருத்துவ உலகின்
 மாணிக்கம் அவனே,
 தமிழரின்  வாழ்வின்
தாரகம் அவனே....

உறுதிகொண்ட எம்
உன்னதர் நெஞ்சை
அசைத்துப் பார்த்தவன்
திலீபனே......

ஊரெழு பெற்ற
உத்தமன் அவனே...
உறங்கிடா கனவின்
உயிர்த்துடிப்பவனே......

அகிம்ஷை வாழ்வினை
வென்று காட்டிய வீரனே......
ஆகுதியானாய்
தமிழர் தம் விடிவு தேடியே......

காலங்கள் போகும்
கார்த்திகையும் பேசும்....
வானவெளியிலே
வண்ணச் சுடரென
திலீபனே........


கோபிகை

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo








கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.