இந்தோனேசியாவில் பாரிய காட்டுத் தீ!!

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத் தீயை அணைக்க மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.


இந்தோனேசியாவில் மழைக் காடுகள் அமைந்துள்ள சுமத்ரா மற்றும் போர்னியோவில் கடந்த சில நாட்களாக கடுமையான காட்டுத் தீ நிலவுகின்றது.

இந்நிலையில் காட்டுத் தீயை அணைக்க சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் சுமத்ராவில் பேகன்பர் நகரில் ஆளுநர் அலுவலகத்துக்கு வெளியே பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

காட்டுத் தீ காரணமாக அப்பகுதியில் கடுமையான காற்று மாசு நீடிப்பதால் உடல்நிலை பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

மேலும் காற்று மாசு காரணமாக 400 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அதேநேரம் 10 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் காற்று மாசு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வான்வழிப் பயணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஒருமாதமாக நிகழும் காட்டுத் தீயை அணைக்க சுமார் 9,000 இராணுவ வீரர்களை இந்தோனேசியா அனுப்பியுள்ளது. சுமார் 239 மில்லியன் தண்ணீர் இதுவரை காட்டுத் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இதுவரை 5,062 தீ ஏற்படும் பகுதிகள் கண்டறிப்பட்டுள்ளன என்றும் பேரிடர் மேலாண்மை அறிவித்துள்ளது.

இந்தோனேசிய தீ விபத்தில் இருந்து வரும் நச்சு புகை ஏற்கனவே அண்டை நாடான மலேசியாவிற்கு நகர்ந்துள்ளது. அதேநேரம் புகைமூட்டம் அதிகமாக இருக்கும் பிராந்தியங்களில் செயற்கை மழையை ஏற்படுத்தி தற்காலிகமாக நிவாரணம் அளிக்க மலேசிய அரசாங்கம் தயாராகவுள்ளமை குறிப்படத்தக்கது.

உலகம் முழுவதும் இவ்வாறான அழிவகள் தினம் தினம் இடம் பெற்று வருகின்றதுடன் பூமியின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசன் காட்டுத் தீ சிறந்த எடுத்துக் காட்டாகும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.