வவுனியாவில் 14 வயது சிறுவனைக் காணவில்லை!!

வவுனியா 14 வயதுடைய ஜெயராசா கனிஸ்டன் என்ற பாடசாலை மாணவனை காணவில்லையென மாணவனின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


குறித்த மாணவன் பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிnறுவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூந்தோட்டம் காந்திநகர் பகுதியிலிருந்து மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள அப்பம்மா வீட்டுற்கு செல்வதாக தெரிவித்து கடந்த 07 திகதி மதியம் துவிச்சக்கரவண்டியில் குறித்த சிறுவன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

இந்நிலையில் இரவு வெகு நேரமாகியும் சிறுவன் அப்பம்மா வீட்டிற்கு செல்லவில்லை.

இதனையடுத்து அயலர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் பெற்றோர்கள் சிறுவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோதும்  பயனளிக்கவில்லை.

அதன் பின்னர் நேற்று முன்தினம் மகனை காணவில்லையென வவுனியா பொலிஸ் நிலையத்தில் சிறுவனின் தந்தை முறைப்பாடொன்றினைச் செய்துள்ளார்.

வீட்டை விட்டு குறித்த சிறுவன் வெளியேறிய சமயத்தில் நாவல் நிற சேட் மற்றும் கறுப்பு ஜீன்ஸ் அணிந்திருந்ததாகவும் அவரை பற்றி தகவல் ஏதேனும் அறிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது கீழேயுள்ள தொலைபேசி இலக்கங்களிற்கோ தெரிவிக்குமாறும் சிறுவனின் தந்தை கோரியுள்ளார்.

077 – 4982220

076 – 6530123

076 – 0158241

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.