கஞ்சிப்பானின் உணவுப் பொதியில் தொலைபேசிகள்!!

பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாளகுழு தலைவனான கஞ்சிப்பானை இம்ரானுக்கு கொண்டு செல்லப்பட்ட உணவுப் பொதியில் 2 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அத்துடன் கைத்தொலைபேசிகளின் சார்ஜர்களும் பொல்ஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்வத்துடன் தொடர்புடைய கஞ்சிபானின் தந்தை மற்றும் சகோதரர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரான் என அழைக்கப்படும் மொஹம்மட் நஜீம் மொஹம்மட் இம்ரானை கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் இம்மாதம் 20 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.