தொடரும் பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு!!

அனைத்துப் பல்கலைக்கழகத் தொழிற்சங்க ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


சம்பள உயர்வு உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 10ஆம் திகதி முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தங்களின் பிரச்சினைக்கான உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தினை கைவிடப்போவதில்லை என அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் தம்மிக எஸ் பிரியந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இலங்கை நிர்வாக சேவை சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் தலைவர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் சம்பளப் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுகொடுக்க இணக்கம் காணப்பட்டதைத் தொடர்ந்தே போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பள உயர்வு உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நேற்று மற்றும் நேற்று முன்தினம், இலங்கை நிர்வாக சேவை சங்கத்தினர் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்காரணமாக காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வு, ஆட்பதிவு, ஓய்வூதிய, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

















கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.