எனதான நம்பிக்கை -கவிதை!!

விரிகின்ற
நாட்களிலெல்லாம்
அழகான தேடல்களை
இயல்பாய் கரம்பற்றி
தொடர்கின்ற வேளையில்
இடையில் ஏனோ
முட்களின் உதிரல்கள்..??


மென்தரை அளாவிய
பாதங்களில்
குருதியை சொட்ட
வைத்திடும் இந்த ரணத்தின்
எதிர்பார்ப்பு என்னவோ..??
வலிகளை எனக்குள்
விரவிடும் உங்கள்
வார்த்தைகளை
தூர விலக்குகிறேன்

இவள் தேடல்களின்
தொலைவு நீங்கள்
வரையறுத்திடா
தேசங்கள் கடந்ததே...
இந்த ரணங்கள் தாண்டிய
நீள் பயணங்கள்
என்னை அழைத்தபடி.....
தொடர்கிறேன் நான்
எனதான நம்பிக்கையுடன்

கண்ணம்மா
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.