உப்புத் தொழிற்சாலை ஒன்றை நிறுவுவதற்கான பிரேரணை முன்னணி முன்மொழிவு!

நல்லூர் பிரதேச சபையின் 18 வது(11.09.2019) சபை அமர்வில் திருமதி கௌசலா சிவா முன் மொழியப்பட்ட 3 வது பிரேரணை முன்மொழிவாக
உப்புத் தொழிற்சாலை ஒன்றை நிறுவுவதாகும்.

எமது வளங்களில் ஒன்றான ஆனையிரவு உப்பானது தென் பகுதி வியாபாரிகளால் 12/- க்கு கொண்டு சென்று தரம் பிரித்து 60/- ரூபாவிற்க்கு எமக்கே விற்கப்படுகிறது வளச்சுறண்டலுக்கப்பால் எமது மக்களின் உழைப்பின் ஊதியமும் சுறண்டப்படுகிறது அதை தடுக்கும் நோக்கிலும் எம் வடபகுதி இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பையும் வழங்கி சபையின் வருமானத்தையும் அதிகரிகரிப்பதோடு குறிப்பாக பெண் தலைமைத்துவ அங்கத்தவர்ளுக்கான வேலை வாய்ப்பை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் நோக்கிலும் இப் பிரேரரணையை சபையில் சமர்ப்பித்தேன் வாத பிரதி வாதங்களின் பின் சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
மக்களுக்காக நாம் என்றும் மக்களோடு நாம்
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின்
நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்
திருமதி கௌசலா சிவா
Powered by Blogger.