அமீர் கானுடன் யோகி பாபு!

விஜய் சேதுபதியைத் தொடர்ந்து அமிர் கான் நடிக்கவுள்ள புதிய படத்தில் யோகி பாபுவும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.


அமீர் கான் 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இப்படம் அந்தாண்டிற்கான 6 ஆஸ்கர் விருதுகளை வென்று, ‘ஆல் டைம் கிளாசிக்காக’ கொண்டாடப்படும் படமாகும். இந்தியில் ரீமேக்காகும் இந்தப் படத்திற்கு லால் சிங் சாதா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் பற்றிய அறிவிப்பை அமீர் கான், மெல்போர்னில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் அறிவித்திருந்தார். சீக்ரெட் சூப்பர் ஸ்டார் என்ற இந்திப் படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் இப்படத்தை இயக்கவுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் அமிர் கான் பொள்ளாச்சி சென்றிருந்த போது, விஜய் சேதுபதியை சந்தித்து பேசினார். ‘சங்கத் தமிழன்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த விஜய் சேதுபதியிடம் ‘லால் சிங் சாதா’ படத்தின் கதை குறித்து பேசி நடிக்க கேட்டுள்ளார். இப்படத்தின் கதை ஈர்க்கவே, விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.



இந்நிலையில், தமிழ் சினிமாவில் அதிகப் படங்களில் நடித்து வரும் நடிகரான யோகி பாபுவை இப்படத்தில் நடிக்க வைக்க அமீர் கான் தரப்பில் முயற்சி நடைபெற்று வருகின்றது. சமீபத்தில், இச்செய்தியை யோகி பாபு பத்திரிக்கைகளில் உறுதி செய்தார். மேலும், கால்ஷீட் உள்ளிட்ட நடைமுறை சிக்கல்களை மேற்பார்வையிட்டு விரைவில் இப்படத்தில் நடிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்திருந்தார் யோகி பாபு.
யோகி பாபு தொடர்ந்து நாயகனாக கவனம் செலுத்தி வரும் வேளையில், நகைச்சுவை கதாபாத்திரங்களையும் கைவிடாமல் தொடர்ந்து வருகிறார். நாயகனாக மண்டேலா, பன்னி குட்டி உள்ளிட்ட படங்களிலும் நகைச்சுவை நடிகராக ரஜினிகாந்துடன் தர்பார், விஜய்யுடன் பிகில், விஜய் சேதுபதியுடன் கடைசி விவசாயி, சந்தானத்துடன் ஒரு படம் என இரட்டை சவாரியில் பிஸியாக இருக்கிறார் யோகி பாபு. மேலும் அஞ்சலி நடிக்கும் படத்திலும், சுனைனா நடிக்கும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் யோகி பாபு.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.