யாருக்கும் நேரக்கூடாது : சுபஸ்ரீ தந்தை!

அதிமுக பள்ளிக்கரணை முன்னாள் கவுன்சிலர் மகன் திருமணத்துக்காக வைக்கப்பட்டிருந்த பேனர், விழுந்து விபத்து ஏற்பட்டதில் குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்நிலையில் சுபஸ்ரீயின் தந்தை ரவி, என்மகளுக்கும், குடும்பத்துக்கும் நேர்ந்தது யாருக்கும் நேரக்கூடாது. பேனர் கலாச்சாரம் ஒழிய வேண்டும் என்று கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.


கனடா செல்லும் கனவுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த சுபஸ்ரீயின் மரணம் அவரது குடும்பத்தினரை மிகுந்த வேதனையில் தள்ளியுள்ளது. சுபஸ்ரீயின் தந்தை ஊடகங்களிடம் பேசுகையில், பேனர் கலாச்சாரத்தின் காரணமாகச் சாலையில் வைக்கப்பட்ட பேனர் என் மகளின் மீது விழுந்ததில் அவள் நிலை தடுமாறி கீழே விழுந்தாள். கீழே விழுந்ததும் கையசைத்திருக்கிறாள். ஆனால் பின்னால் வேகமாக வந்த லாரி அவள் மீது ஏறியதில் உயிரிழந்தாள். எங்களுக்கு ஒரே மகள் சுபஸ்ரீ. எங்களுக்கு நேர்ந்த இந்தத் துயரம் எந்தக் குடும்பத்திற்கும் ஏற்படக் கூடாது.
அடுத்த மாதம் வேலை தொடர்பாக என் மகள் வெளிநாடு செல்ல வேண்டியிருந்தது. அவளின் கனவு நிறைவேறாமலேயே போய்விட்டது. அந்தச் சாலையில் பேனர் வைக்கப்படாமல் இருந்திருந்தால் வீட்டுக்கு வந்திருப்பாள். பேனர் கலாச்சாரத்தால் ஏற்படும் உயிரிழப்பில் என் மகளே கடைசியாக இருக்கட்டும். சுமையுந்தை ஓட்டுபவர்களும் வேகத்தைக் குறைத்து ஓட்ட வேண்டும்” என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.
ட்விட்டரில் நண்பர் அஞ்சலி
சுபஸ்ரீயின் மரணத்தை குறித்து பலரும் தங்களது கருத்துக்களையும், அஞ்சலியையும் ட்விட்டரில் பதிவிட்டு வரும் நிலையில், அவரது அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் சுபஸ்ரீக்கு இரங்கல் தெரிவித்த ட்விட்டர் பதிவு பார்ப்பவர்கள் மனதை உறையச் செய்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.