தொடர்கிறது நாடகப் பயிற்சிகள்..!!
புதியவானமாய்புதிய நட்சத்திரமாய்
புதிய சிந்தனையாய்
மனம் இருந்தாலே
வாழ்வு இனிக்கும்
அடைந்து கிடக்கும் கவலைகளை அழிக்க
நிறைந்து கிடக்கும் சோம்பலை முறிக்க
கலைகள் அளப்பரிய பங்கினை செய்கின்றது
குழுவாகப் பேசுதல்
குழுவாகச் சிரித்தால்
குழுவாக விருந்துண்ணல்
இன்று குறைந்து வருகிறது
குறைந்த அதைக் கூட்ட
கலைகள் அளப்பரிய பங்கினை செய்கின்றது
அவர் அப்படி
இவர் இப்பிடி என
மற்றவர் குறைகளை கறைகளைக் கிளைந்து அளைந்து பேசி வேறுபாடுகளை பெரிதாக்கல் அதிகரித்துவருகிறது
அதைக் குறைக்க
கலைகள் அளப்பரிய பங்கினை செய்கிறது
சிரித்து மகிழ்ந்து உடலைக் கட்டுக்கோப்பாய் வைத்திருக்க
கலைகள் அளப்பரிய பங்களிப்பினை செய்கின்றது
அதற்காகவே இன்றும் பாடினோம் ஆடினோம்
வள்ளிதிருமணம்
காமன் கூத்து
காத்தவராயன் கூத்து
கோவலன் கோத்து
இராவணேசன் என விரிகிறது நாட்கள்
மாயரத மோதியே பேய்கள் நின்றாடவே வந்தனுமிச் சபையிலே" என இந்திர ஜித்தின் முழக்கம் சாலச் சிறப்பு
முழக்கங்கள் தொடரும்.



.jpeg
)





கருத்துகள் இல்லை