சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம்!!

விண்வௌியில் இருந்து வரும் பாதிப்பான அதிர்வலைகளையும், சூரியனின் புற ஊதாக்கதிர்களின் வீரியத்தை தடுப்பதற்கும் பூமியை சுற்றியுள்ள ஓசோன் (Ozone) படலம் பெரிதும் உதவுகின்றது.


கூடுதலான வெப்பத்தை குறைத்து பூமியை பாதுகாத்து வரும் ஒசோன் படலத்தின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது.

ஓசோன் (Ozone = ஓக்ஸிஜன் வலயம் = O3) என்பது மூன்று ஓக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்திருக்கும் ஒரு மூலக்கூறாகும். இது வளிமண்டலத்தின் மேல் வாயு நிலையில் பரந்துள்ளது.

1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி கனடாவின் தலைநகரில் ஓசோன் படையை அழிக்கும் ரசாயனங்களுக்கு எதிரான ‘மொன்றியல்” உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதை அடுத்து அந்தத் தினமே 1995 ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

பூமியிலிருந்து 20 தொடக்கம் 60 கி.மீ உயரம் வரை பரவி உள்ள ஓசோன் படலம் சூரிய ஒளிக்கதிர்களில் நமது கண்ணுக்கு புலப்படாத அகச்சிவப்பு கதிர்கள் மற்றும் புற ஊதாக்கதிர்களை தடுத்து நிறுத்தும் வல்லமையை கொண்டுள்ளன.

பூமியிலிருந்து 15 கி.மீ. முதல் 60 கி.மீ உயரம்வரை உள்ள வளிமண்டலப் பகுதி Stratosphere என அழைக்கப்படுகின்றது.

இந்தப் பகுதியில் உள்ள ஓக்ஸிஜன் மீது சூரியனின் புறவூதா கதிர்வீச்சு வேதிவினை புரிவதால் ஓக்ஸிஜன் அணுக்கள் பிரிக்கப்பட்டு, அந்த அணுக்கள் புதிய ஓக்ஸிஜனுடன் சேர்ந்து ஓசோன் வாயுவாக மாறுகின்றன. இது ஒரு படலம் போலப் பூமியைச் சூழ்ந்திருக்கின்றது.

இந்தப் படலம் இருப்பதால் சூரிய ஒளி பூமியை நேரடியாக தாக்குவதில்லை. புற ஊதாக் கதிர்கள் பூமியில் மனிதர்க்கு மட்டுமல்லாது, விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும் தன்மையை கொண்டுள்ளன.

ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கு, குளிர்பதனப் பெட்டி, அறை குளிரூட்டிகள் ஆகியவற்றில் இருந்து வௌியாகும் குளோரோ புளூரோ கார்பன் பெரிதும் தாக்கம் செலுத்துகின்றது.

இது ஓசோனுடன் வினைபுரிந்து குளோரினாகவும், ஓக்ஸிஜனாகவும் மாறுகின்றது. இதனால் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்துபோகின்றது. உரங்களில் பயன்படுத்தப்படும் மெத்தில் புரோமைடு, ஜெட் விமானங்கள் வெளியிடும் நைட்ரிக் ஒக்சைட் போன்றவையும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

தற்போது ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைவடைவது கட்டுபடுத்தப்பட்டுவிட்டாலும் கூட, ஓசோன் படலத்தில் ஏற்பட்ட பாதிப்பு முழுமையாகச் சீரமைக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.