இளந்தாரியானது எழுக தமிழ்க் குழந்தை!!
கடந்த எழுக தமிழ்போல்
அதற்காக எழுக தமிழ் தோல்வி என்று கருதிவிட முடியாது
அது மக்களைப் பொறுத்தவரை வெற்றியே தவிர
அரசியல்வாதிகளைப் பொறுத்த வரை தோல்விஎன்றே கூறிவிட முடியும்
முதலில் எழுக தமிழ் எப்படி ஆக்கம் பெறுகிறது
அது தனியே ஒரு விக்கினேஸ்வரன் என்ற பெயராலோ
அல்லது வேறு பெயர்களாலோ ஆனது அல்ல
தமிழ் மக்கள் பேரவையை மக்கள் அது தோன்றிய காலத்தில் பெரிதாக எதிர்பார்த்தார்கள்
ஆனால் எதிர்பார்ப்புகளை அது நிறைவு செய்யவில்லை
ஆனாலும் அது பிரசவித்த எழுக தமிழ்க் குழந்தை வளர்ந்து இளம்பராயமாகி ஈழத்தின் அடுத்த சந்ததியை சிந்திக்க வைத்துள்ளது
என்ன வளர்ந்த எழுக தமிழ்க் குழந்தை கொஞ்சம் சத்துக்குறைந்த போலியோ நோயாளிபோல் காட்சியளிப்பது வருத்தம்
அதற்காக சத்துக்குறைந்த பிள்ளையை ஒதுக்க முடியாது
அது நாளை மிக ஆரோக்கியம்மிக்க பிள்ளையாக வளரலாம்
சரி அதை வளர்ப்பது யார்
திரு விக்கினேஸ்வரனா
இல்லை
தமிழ் மக்கள் பேரவையா
அதுவும் இல்லை
அப்ப யார்
அதுதான் மக்கள் மக்கள் மக்கள்
இங்கு சிலர் நினைப்பது போல் எந்தத்தனிப்பட்ட நபருக்காகவும் எழுக தமிழ் கூடவில்லை
ஆனால் எழுக தமிழ் ஆக்கத்துக்கு
வித்திட்ட தமிழ்ப்பேரவைக்கும்
திரு விக்கினேஸ்வரனுக்கும் முக்கிய பங்கிருப்பதை மறுப்பதற்கில்லை
அதற்காக திரு விக்கினேஸ்வரனோ ஏனையோரோ தவறுவிடின் அதற்காக அவர்களுக்குப் பின்னால் செல்லவும் தயாராகவில்லை
அவர்கள் சரியாகவிருக்கும்பட்சத்தில் அவர்களை மாதிரியாகக் கொண்டு ஈழவிடுதலைப் பாதையைத் தேடுவதற்கே எழுக தமிழ்க் குழந்தை வளர்ந்திருக்கின்றது
கூட்டமைப்பின் வெற்றிடம்
அல்லது தவறு
சிங்களத்தின் தான்தோன்றித்தனம்
சர்வதேசப் பொறியாவற்றையும் உடைக்க
நினைக்கும் முயற்சியும் சமநேரத்திலான கையறுநிலையினையும் கொண்டே
எழுந்து நின்றது எழுக தமிழ்க் குழந்தை
இந்தச் சத்துக்குறைந்த எழுக தமிழ்க் குழந்தைக்கு சத்து ஊட்டவேண்டுமாயின் தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றிணைய வேண்டும்
அப்படி ஒன்றிணையா விடின் சத்துக்குறைந்த எழுக தமிழ்க்குழந்தை ஒன்றும் செத்துப் போகாது
அது தன்னைச் சுதாகரித்து
புதுச் சூரியனைத் தயாரித்து மூர்க்கத்தனமாய் சுட்டெரிக்கும்
யாவரையும் என்பதையே
காலம் கற்பித்து நிற்கின்றது
எனெனில் நூறுவருடங்களுக்கு மேலாக போராடி விடுதலை பெற்ற நாடுகள்
சிறையில் மீண்டு மறுபடியும் மாவீரனாகி தன் சாம்ராஜ்ஜத்தை ஆண்ட நெப்போலியன் வரலாறு கண்முன்னே விரிந்து கிடக்கிறது
அவையாவும் சொல்கிறது
இந்தியாவின் சூட்சியோ
சில அரசியல்வாதிகளின் சுயநலமோ
மக்கள் முன் வென்றுவிடாது என்று.

.jpeg
)





கருத்துகள் இல்லை