யா /கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாசாலையில் வறிய 📷 மாணவர்களுக்கு கற்றல் உதவி!!

யா /கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல்
செயற்பாடுகளை ஊக்குவிக்குமுகமாக இன்றைய தினம் (20.09.2019) இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மூலம்  பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது . அந்நிகழ்வில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர் கலந்து கொண்டனர் .  எனது வேண்டுகோளை ஏற்று மாணவர்களுக்கு பாதணிகளை வழங்கி வைத்த வருத்தப் படாத வாலிபர் சங்கத்தினருக்கு பாடசாலை சமூகம் சார்பிலும் தனது சார்பிலும் முன்னணி சிவா. கெளசல்யா நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

 மேலும் இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மிக வறிய குடும்பத்து பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.