ஆனந்தசங்கரியின்20 ஏக்கர் காணி தானமும் எதிர்வரும் தேர்தலும்!

முல்லைத்தீவின் சுதந்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான 20 ஏக்கர் காணியை மக்களிற்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வீ.ஆனந்தசங்கரி பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அவர்களிற்கு சொந்தமான காணியையே இவ்வாறு மக்களிற்கு பகிர்ந்தளிக்க பிரதேச செயலாளரிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த காணியில் 1988ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியிலிருந்து சுமார் 20 குடும்பங்களிற்கு மேல் வாழ்ந்து வருகின்றனர். எனினும், குறித்த காணியின் உரிமம் அவர்களிற்கு கிடைக்காமையினால் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

நேற்று முந்தினம் குறித்த காணியில் குடியமர்ந்துள்ள மக்கள் வீ.ஆனந்தசங்கரியை சந்தித்து பாதிக்கப்பட்ட தமக்கு பகிர்ந்தளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இவ்விடம் தொடர்பில் பிரதேச செயலகத்திற்கு வீ.ஆனந்தசங்கரி காணியை மக்களிற்கு பகிர்ந்தளிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பல்வேறு இழப்புக்களை சந்தித்த மக்கள் வேறு காணிகள் இன்றி எனது காணியில் நீண்ட காலமாக வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் சட்ட ரீதியாக குறித்த காணியில் ஆட்சி செய்யாவிடினும் அவர்களின் பாதிப்பு நிலையை தான் உணர்வதாகவும் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் எனது காணியில் குடியிருக்கும் மக்களில் ஒரு பகுதியினர் தன்னை சந்தித்து காணிகளை பகிர்ந்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அவர்களின் இந்த துன்பமான நிலையில் வேறு இடங்களிற்கு அனுப்பி காணியை பெற்றுத்தர கோரும் மனநிலை எனக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எனக்க சொந்தமானதென குறித்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள காணியை, அங்கு குடியிருக்கும் மக்களிற்கே வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரிற்கு ஆனந்தசங்கரி ஆலோசனை வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.