புவியியல் அறிஞர் சிங்கநெஞ்சம் சம்பந்தம் மறைவு !!

தமிழ் ஈழ உணர்வாளரும், தமிழகத்தின் குறிப்பிட்டு சொல்லக்கூடிய புவியியல் துறைசார் ஆய்வறிஞருமான சிங்கநெஞ்சம் சம்பந்தம்  இன்று மறைந்தார்.

40 வருடங்களுக்கு மேலாக  புவியியல் துறையில்  துறைசார் நிபுணராக பணியாற்றிய இவர் தரைத்தோற்றவியல், மண்ணியல், பாறைப்படைகள், பவளப்பாறைகள் , குமரிக்கண்டம், தமிழ் இலக்கியம் என்பன குறித்து ஆய்வுசெய்து எழுதிவரும் யதார்த்த ஆய்வாளர்

இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் வாதப்பிரதிவாதங்களும், சர்ச்சைகளும் மிக்கவை. தன்னுடைய கருத்துக்களை நிரூபிப்பதற்கு விஞ்ஞான பூர்வ விளக்கங்களையும் , இலக்கிய ஆதாரங்களையும் முன்வைப்பதில் நிபுணர்.

பல்லாயிரக்கணக்கான  வாசகர்களைக் கொண்ட இவரது இழப்பானது யதார்த்த அறிவுசார் தேடல்களில் ஈடுபடுபவர்களுக்கு  ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
Blogger இயக்குவது.