விக்ரம் லேண்டர் குறித்து விண்வெளி வீரரிடம் கேள்வி!
சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் குறித்து ஹொலிவுட் நடிகர் பிரெட் பிட், விண்வெளி வீரர் நிக் ஹேக்கிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரபல ஹொலிவுட் நடிகர் பிராட் பிட் நடித்த ‘AD ASTRA’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், குறித்த திரைப்படத்தில் அவர் விண்வெளி வீரராக நடித்துள்ளார்.
இந்த நிலையில் ‘அட் அஸ்ட்ரா’ திரைப்படத்தின் விளம்பரத்துக்காக வொஷிங்டன் நகரில் உள்ள நாசாவின் தலைமையகத்துக்கு பிராட் பிட் சென்றிருந்தார்.
அப்போது சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்த விண்வெளி வீரர் நிக் ஹேக்குடன் ‘காணொளி நேரடி அழைப்பின்’ மூலம் உரையாடினார்.
விண்வெளி மையத்திலுள்ள வாழ்க்கை குறித்து சுமார் 20 நிமிடங்கள் வரை இருவரும் சுவாரஸ்யமாக கலந்துரையாடினர்.
அப்போது, ‘‘விண்வெளி வீரர் கதாபாத்திரத்தில் யார் நம்பும்படியாக இருக்கிறார்? நானா? அல்லது கிராவிட்டி திரைப்படத்தில் நடித்த ஜோர்ஜ் குளூனியா?’’ என்று பிராட் பிட் நகைச்சுவையாக வினவினார்.
அதற்கு புன்னகையுடன் பதில் அளித்த நிக் ஹேக், ‘‘நிச்சயமாக நீங்கள் தான்’’ என்று கூறினார்.
அதன் பின்னர், சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் குறித்தும் பிராட் பிட் கேள்வி எழுப்பினார்.
இதன்போது அவர் ‘‘இந்தியாவின் மூன் லேண்டரைப் பார்த்தீர்களா?’’ என கேள்வியெழுப்பினார்.
அதற்கு ‘‘துரதிர்ஷ்டவசமாக அதனை நான் பார்க்கவில்லை’’ என ஹேக் பதிலளித்தார். இந்த உரையாடல் காணொளியை நாசா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை