ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் அங்கவீனமுற்ற சிறீலங்கா இராணுவத்தினர்!
அங்கவீனமுற்ற இராணுவத்தினர் மற்றும் உயிரிழந்த இராணுவ வீரர்களின்
குடும்பத்தார் நேற்று இரவு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்
ஒன்றை நடத்தியுள்ளனர்.
சம்பளம் உள்ளிட்ட மேலும் பல பிரச்சினைகளை மையப்படுத்தியே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
தங்கள் போராட்டம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கு இராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் யு.டீ.வசந்த பதிலளித்தார்.
இந்த ஆர்பாட்டம் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.ஆர்ப்பாட்டகாரர்கள் அமைத்திருந்த தற்காலிக கொட்டைகளையும் கோட்டை பொலிஸார் நேற்றைய தினம் அகற்றியிருந்தனர்.
இதனால் நேற்று நள்ளிரவு பெய்த மழைக்கு மத்தியிலும் ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை