மக்கள் புரட்சி வெடிக்கும் கனடிய மண்ணில் மாபெரும் எழுச்சிப் பேரணி!

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்" என அன்று தியாக தீபம் திலீபன் சொன்னது போல் நீதி வேண்டும் தமிழினம் வீதியில் இறங்கி போராடும் காலம் இது.
"மக்கள் புரட்சி வெடிக்கட்டும். சுதந்திர தமிழீழம் மலரட்டும்."
உலகத் தமிழ் மக்களின் போராட்டங்கள் உலக பரப்பெங்கும் மக்கள் சக்தியின் பலத்தை வலிமையோடு படைக்கட்டும்!
ஆம்! பார்த்தீபன் இன்னமும் பசியோடே இருக்கின்றான்!
மக்கள் புரட்சி வெடிக்கும் கணங்களில் உயிர்த்து மகிழ்கிறான்!
கனடாவில் மாபெரும் எழுச்சிப் பேரணி!
தமிழீழத்தில் இடம்பெறவிருக்கும் எழுக தமிழுக்கு ஆதரவாகவும்..
ஜெனீவாவில் இடம்பெறவிருக்கும் கவன ஈர்ப்பு பேரணிக்கு ஆதரவாகவும்...
கனடிய மண்ணில் மாபெரும் எழுச்சிப் பேரணி!
இடம்: அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு முன்னால்
(360 University Avenue)
காலம்: ஞாயிற்றுக் கிழமை
செப்டம்பர் 15, 2019
மாலை 4 மணி முதல்
கனடிய தமிழர் சமூகம் மற்றும் கனடிய மாணவர் சமூகமாக இணைந்து அனைத்து கனடிய உறவுகளையும் இப்பேரணியில் கலந்துகொள்ள அழைக்கின்றார்கள்!
அனைத்து கனடா வாழ் தமிழ் உறவுகளும் எழுச்சி கொண்டு வாருங்கள்!
தொடர்புகளுக்கு: 416.830.7703
கருத்துகள் இல்லை