குழந்தைகளுக்கு கார் இருக்கை ஏற்றதல்ல,பிரித்தானியா ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை!!📷

ஆறு வாரங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கார் இருக்கை ஏற்றதல்ல, 
பிரித்தானியா ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை.

ஆறு வாரங்களுக்குட்பட்ட குழந்தைகளை கார் இருக்கையில் கிடத்தி 30 நிமிடங்களுக்கு மேல் பயணிக்க வேண்டாம் என பிரித்தானியா சேர்ந்த ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.4 முதல் 6 வாரங்களுக்கு உட்பட்ட குழந்தைகளை குளிக்க வைத்த பின், கார் இருக்கையின் பின்னால் படுக்கவைத்து உறங்கவைப்பது ஆபத்து எனவும், குழந்தைகள் உறங்குதலுக்கு ஏற்ப எந்த கார் இருக்கையும் வடிவமைக்கப்படவில்லை என்றும் சர்ச்சில் கார் காப்பீட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் 12 ஆயிரம் குழந்தைகள் கார் இருக்கையில் மரணமடைந்ததாகவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. பிறந்து 6 வாரங்களுக்கு உட்பட்ட குழந்தைகளை 40 டிகிரி கோணத்திலோ, படுக்க வைத்தோ காரில் வைத்து நீண்ட நேரம் பயணிக்கும் போது அவர்கள் காரின் இயக்க வேகத்தில் தலை குப்புற விழவோ அல்லது மூச்சுத் திணறல் ஏற்படவோ வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.இதுகுறித்த விழிப்புணர்வு உள்ளதா? என 2 ஆயிரம் பெற்றோரிடம் சோதனை மேற்கொண்டதாகவும், ஆனால், 35 வயதுக்கும் மேற்பட்டவர்களைத் தவிர பிற இளம் பெற்றோருக்கு இது தெரியாமல் இருப்பதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.பச்சிளங்குழந்தைகளை காரின் பின் இருக்கையில் 30 நிமிடங்களுக்கும் மேல் பயணிக்க வைப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் எனக் கோரியுள்ள ஆய்வு நிபுணரும்,பிரிஸ்டல் பல்கலைக்கழக பேராசிரியருமான பீட்டர் ஃபிளமிங், தவிர்க்க முடியாத சூழலில் இடை இடையே ஓய்வெடுப்பது, பின்னிருக்கையில் ஆள் ஒருவரை அமரவைத்து, குழந்தையின் நிலை குறித்து அவ்வப்போது பராமரிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். வீட்டிலும் நின்று கொண்டிருக்கும் காரில் குழந்தையை உறங்க வைப்பது ஆரோக்யமானதல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.