கரும்புலி மேஜர் குமரவேல் - மனிதக் கேடயம் - நந்திக்கடல். ஒரு பார்வை.!
கடற்கரும்புலி மேஜர் குமாரவேலின் நினைவு நாள் இன்று..
01.09.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் நீரூந்து விசைப்படகு ஒன்றினைத் தாக்கியழிக்கும் முயற்சியின் போது தேசத்துரோகி ஒருவரின் காட்டிக்கொடுப்பினால் தாக்குதல் திட்டத்தினை ஊகித்துக் கொண்ட சிறிலங்கா கடற்படையினர் அப்பகுதியில் தொழிலில் ஈடுபட்ட மீனவர்களை தமது படகில் ஏற்றியிருப்பதை தெரிந்து கொண்ட கடற்கரும்புலி மேஜர் குமாரவேல் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாதவகையில் கடற்படைப் படகிற்கு தொலைவாக வைத்து தனது படகினை தகர்த்து வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
'புலிகள் மக்களை சுட்டார்கள். பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தார்கள்' என்று வெளியில் இருந்து சொல்பவர்கள் சொல்லட்டும். ஆனால் எமக்குள்ளிருந்தே சொல்பவர்கள் குமரவேல் போன்ற பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் அர்ப்பணிப்பை அறிந்தபின்பும் சொல்வது எவ்வளவு அபத்தம்.?
தம்மைக் காத்தவர்களுக்கு செய்கிற அநீதி அல்லவா?
முள்ளிவாயக்கால் என்பது பரந்த விரிவான கதைகளையும் கள யதார்த்தங்களையும் கொண்டது. அங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. அதை தயவு செய்து யாரும் தட்டடையாக/ ஒற்றையாக அணுகாதீர்கள் - குறிப்பாக உங்களுக்காக போராடியவர்களை எதிர்நிலையில் வைத்து..
மனிதக் கேடயம். (human shield )
புரொஜெக்ட் பெக்கன் திட்டத்தின் முக்கிய ஒரு செயற்பாடாக புலிகளை போர்க்குற்றவாளிகளாக்கும் ஒரு வரைபு இருக்கிறது. 2005 இலேயே புரிந்துணர்வு உடன்படிக்கை முறிந்து போர் வெடிக்க முன்பே புரொஜெக்ட் பெக்கன் திட்டத்தில் இந்த பகுதியை கொண்டு வந்த சாணக்கியத்தனத்தை நாம் வியக்காமல் இருக்க முடியாது. ஒரு நடைமுறை அரசை அழிப்பதென்றால் சும்மாவா?
வெளியக அடிப்படையில் புலிகளை பயங்கரவாதிகள் முத்திரை குத்தி அழித்த பிற்பாடு நிலத்தில் புலிகளையும் மக்களையும் வேறுபடுத்தும் நோக்குடன் பெக்கான் திட்டம் புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்த நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
மக்கள் புலிகளோடு சென்று ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்குவார்கள் என்றும் அப்போது இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் இருக்கும் மக்களை ‘மனிதக்கேடயம்’ என்ற அடிப்படையில் பிரித்து புலிகளை போர்க்குற்றவாளிகளாக்க முடியும் என்று திட்டம் தீட்டப்பட்டது. அப்படியே நடந்தும் முடிந்தது.
புலிகளை மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தாத/ அப்படி ஒரு சிந்தனையும் இல்லாத/ போரே தொடங்காத ஒரு காலப்பகுதியில் ரோக்கியோவிலும் பின்பு ஒஸ்லோவிலும் வைத்து இந்த ‘மனிதக் கேடயம்' (human shield ) என்ற பதத்தை பயன்படுத்தியதே இந்த புரொஜெக்ட் பெக்கான் திட்டத்தை வரைந்த உலகளாவிய சதிக் கூட்டணிதான்.
இதை விட அமெரிக்கா இந்த ' மனிதக் கேடயம்' என்ற விவகாரத்தை இணைத் தலைமை நாடுகளுக்குத் தெரியாமல் தனியாக குறிப்பாக இந்தியாவை விலத்தி ஒரு நாசகார நகர்வை எடுத்திருந்தது.
அது 'மக்களை மீட்கிறோம்' என்ற போர்வையில் புது மாத்தளன் பகுதியில் அமெரிக்காவின் நிரத்தர தளம் ஒன்றிற்கான முன்னேற்பாடாக இருந்தது.
சுதாரித்த இந்தியா தமிழின அழிப்பை துரிதப்படுத்தியதற்கு காரணமும் இதுதான்.
உண்மையில் தமிழர்களின் உயிரைப் பணயமாக்கி மிகப்பெரிய பூகோள இராஜதந்திர போர்க்களம் அப்போது திறக்கப்பட்டிருந்தது.
தலைவர் தனி மனிதனாக இதை எதிர் கொண்டு நடத்திய பகடையாட்டம்தான் இன்று 'பிரபாகரனியம்' என்னும் நவீன விடுதலைக் கோட்பாடாக நம் முன் கிடக்கிறது.
நந்திக்கடல் கோட்பாடுகள்.
‘நந்திக்கடல்’ தர்க்க நியாயங்களுடன் புலிகளுக்கு எதிரான மனிதக் கேடயக் குற்றச்சாட்டை மறுதலிப்பது
மட்டுமல்ல, அதை ஒரு உலாகளாவிய கோட்பாடாகவும் முன்வைக்கிறது.
போராடும் இனங்களையும் அவர்களின் போராட்ட பிரதிநிதிகளையும் பிரித்தாளும் தந்திரங்கள் குறித்து நிறையவே எச்சரிக்கிறது ‘நந்திக்கடல்’.
ஒரு வரலாற்று நாயகனின் சாட்சியாக – உளவியலாக இறுதிக் காலங்களில் மக்களுக்கும் புலிகளுக்கும் இடையில் நிகழ்ந்த ஊடாட்டத்தை அறம் சார்ந்து விபரிப்பது மட்டுமல்ல, ‘மனிதக் கேடயம்’ என்ற பயங்கரவாத அரசுகளின் அயோக்கிய சொல்லாடலான அறம் மீறிய இராணுவ தந்திரோபாயத்தையும் அம்பலப்படுத்துகிறது ‘நந்திக்கடல்’.
இதன் வழி தமிழினத்திற்கான விடுதலைச் சூத்திரத்தை மட்டுமல்ல உலகளாவிய ஒடுக்கப்பட்ட இனங்களின் விடுதலைக் கோட்பாடுகளை முன்வைத்து வரலாற்றில் தனது இடத்தை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது ‘நந்திக்கடல்’.
எனவே மாவீரர்களின் தியாகங்களை மதிப்போம். அரச பயங்கரவாதத்தின் சதியை புரிந்து கொள்வோம்.
'நந்திக்கடல்' எம்மிடம் திரும்பத் திரும்ப வைக்கும் வேண்டுகோள் இது ஒன்றுதான்.

.jpeg
)

கருத்துகள் இல்லை