வீழ்வேனென்று நினைத்தாயா!!


அழகிய கவிதைகளைப் பாடும் குழந்தை மனங்கொண்ட ஒவ்வொரு இருதயமும் பாரதியின் சாரதியாகவேனும் தம்மை வெளிப்படுத்தும்


ஏதோ மந்திரம்போல் பிறருக்கு விளங்காதவாறு தமது வித்தகங்களைக் காட்டி கவிதை எழுதிய கவிஞர் குழாமில் முதன் முதல் ஒரு நெருப்புத்தணல் கொழுந்துவிட்டுப் பற்றியது
அது பாரதியென பாரதம் கடந்து மேதினி எங்கும் சுவாலையானது
எளிய மக்களின் பாடுகளை எளிய மக்களுக்குப் புரியும் வசனங்களின் கவிதைகளைப் பொழிந்து கவித்துவப் போலிகளை உடைத்தெறிந்தவன் பாரதி

சாதிக்கெதிராக
வெள்ளையனுக்கெதிராக
ஆணாதிக்கத்துக்கெதிராக
பெண்ணுக்கா
மண்ணுக்கா
தமிழுக்கா
பராசக்திக்காக
இயற்கைக்காக
சமூக சீர்திருத்தத்திற்காக வென
நீண்டு சென்றது பாரதியின் கவித் தீ

இன்று பச்சையாடை போர்த்தி இச்சையானதை மட்டும் எழுதி விருதில் குளிர்காயும் கறுத்தாட்டினர் யாவரும் பாரதி என்ற கவிஞனை படிக்கவேண்டியது மிகவும் அவசியம்

பாரதி ஒவ்வொரு கவிதைகளையும் தனது குழந்தையாக மனைவியாக கனவு யாத்தான் அதற்கேற்பவே அதாவது ஒரு கவிஞனாகவே அவனது வாழ்வும் முடிவடைந்தது

பெண்ணுக்குள் ஞாலத்தை வைத்தான்
புவி பேணிவளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள் சில மூடர்
நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்றிருந்தோர்
மாண்டு விட்டனர்

என பெண்ணிய மண்ணியக் கருத்துக்களைப் பாடிய பாரதி
பங்கு பற்றிய கவிதைப் போட்டி ஒன்றில் இரண்டாம் இடம்
அவர் இறந்தபோது கலந்து கொண்டவர் வெறும் எட்டுப் பேர் மாத்திரமே
சிறிய வயதில் மறைந்த பாரதி இன்றும் இந்தப் பெரிய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் ஏன்
அவனுக்குத் தொழில் கவிதை செய்தல் என்பதால்
அவன் கவிஞனாக வாழ்ந்தான் என்பதால்

வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற பாரதியின் வசனத்தை இருதயத்தில் வரையும் ஒவ்வொரு மானிடனும் வசந்தகாலப் பறவையென சிறகெய்வான் என்பது திண்ணம்
இன்றுபோல் என்றும் பாரதியின் சாரதியாய் புதுவிதி செய்வோம்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


இன்றும் மனங்களில் உயிருடன் வாழ்ந்துகொண்டிருக்கும் கவிஞன் பாரதி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.