இக்கினியாகலை படுகொலை...!

1940 களில் அக்கால கட்டடத்தில் விவசாய அமைச்சராக இருந்த டி.எஸ். சேனநாயக்கா அம்பாறை மாவட்டத்தில் அரச நிதி உதவியுடன் பல சிங்கள குடியேற்ற திட்டங்களை நிறுவினான் இதன் மூலமாக அம்பாறை மாவட்டத்தில் கல்லோயா அபிவிருத்தி திட்டம், திருகோணமலையில் கந்தளாய் குடியேற்ற திட்டம் ,அல்லை குடியேற்ற திட்டம் போன்ற குடியேற்ற திட்டம் உருவாக்கப்பட்டு தமிழர்களின் பறந்து விரிந்த நிலபரப்பை சூறையாடப்பட்டன.

அடுத்து 1956 ஆம் ஆண்டு நடை பெற்ற பொது தேர்தலில் எஸ்.டபியு .ஆர்.டி பண்டரனயக்கே இலங்கையின் பிரதமர் ஆனார் அவரது வாக்குறுதிகளில் ஒன்றான சிங்களம் மட்டும் சட்டத்தை 956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் இதை அகில இலங்கை தமிழரசு கட்சி தனது எதிர்ப்பை நேரடியாக தெரிவிக்க 1956ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்க்கு முன்னால் சத்தியாகிரக போராட்டத்தை நடத்தியது. இதில் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த தமிழ் கல்வி மான் வணபிதா தனிநாயகம் அடிகளார் அவர்களும் கலந்துகொண்டார் அன்றைய தினம் சிங்கள காடையர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் வயது வித்தியாசம் இன்றி தாக்கப்பட்டு தமிழ் மக்கள் பலரை கோரமாக கொலை செய்தனர் கொழும்பில் உள்ள தமிழர்கள் கடைகள் கொள்ளையடிக்கப்பட்டு தீவைத்து கொளுத்தப்பட்ட்டது
அன்றைய தினம் இலங்கை தீவு முழுவதும் தமிழர்களுக்கு எதிரான பல கொலை கொள்ளைகள் நடத்தப்பட்டன

அம்பாறை மாவட்டத்தில் குடியேறிய சிங்கள காடையர்கள் தமிழரகளுக்கு எதிரான வன்முறையில் இக்கினியாகலை என்ற இடத்தில் கரும்பு தொழிற் சாலையில் வேலை செய்து வந்த 150 அப்பாவி தமிழர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர் அரைகுறை உயிருடன் உள்ளவ்ரர்களை இறந்தவர்களுடன் எரியும் தீயில் தூக்கி வீசி எறியப்பட்டனர் இதுவே இலங்கை வரலாற்றில் முதன் முதலாக பெருந்தொகை தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.

இனப்படுகொலைகளில் ஏறக்குறைய 150 தமிழகர்கள் படுகொலை செய்யப்பட்டதாக அவசரகலச்சட்டம் -58 என்ற நூலில் தகவல் வெளியிட்டுள்ளது.
இதையே இக்கினியாகலை படுகொலை;
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
 
Powered by Blogger.