பதினொரு தோற்றத்தில் யோகி பாபு!!

பதினொரு தோற்றத்தில் யோகி பாபு நடிக்கும் வி.சி.குகநாதன் கதையில் புகழ்மணி இயக்கத்தில் ‘காவி ஆவி நடுவுல தேவி’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இத்திரைப்படத்தில் யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி நால்வரும் இணைந்து நடிக்கின்றனர்.

மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் பரமிப்பூட்டும் வகையில் தயாராகியுள்ளது.

கதாநாயகனாக ராம் சுந்தர் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார்.

காதலை சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் வரும் யோகிபாபு அதற்காக பதினொரு விதமான தோற்றத்தில் வருவது போன்ற கதையம்சத்தில் உருவாகின்றது.

நான் கடவுள் ராஜேந்திரனும், அவருக்கு துணையாக மலையாள மாந்திரீகனாக இமான் அண்ணாச்சியும் அடிக்கும் லூட்டிகள் நகைச்சுவையில் மேலும்கலக்கும் தம்பி ராமையா வரும் காட்சிகள் அனைத்தும் அதிரடி நகைச்சுவையாக அமைந்துள்ளதாக அமைந்துள்ளது என இப் படத்தின் கதாசிரியரான வி.சி.குகநாதன் கூறியுள்ளார்.

இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் எனவும் படக்குழு குறிப்பிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.