யாழில் முஸ்லீம் குடும்பங்களிற்கான வீட்டுத் திட்டம்!!
யாழ்ப்பாணத்தில் 250 முஸ்லிம் குடும்பங்களிற்கான வீட்டுத் திட்டம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
யாழ்ப்பாணத்தின் அராலி, பொன்னாலை சந்திப்பகுதியில் உள்ள 7.5 ஏக்கர் காணியில் இந்த வீடுகள் அமையவுள்ளன. இரண்டு மாடிகளை கொண்ட இரட்டை வீடுகளாக ஒவ்வொன்றும் அமையும்.
ஒவ்வொரு வீடும் 600 சதுர அடிகளை கொண்டிருக்கும்.
இந்த வீட்டுத் திட்டம் பற்றி ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது.
இறுதியாக பிரதமர் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, இந்த வீட்டுத் திட்டத்திற்கு திட்டம் போட்டிருந்தார்.
அதற்கு முன்னர் பிரதமர் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, வீட்டுத்திட்டத்திற்கான முதற்கட்ட ஆலோசனையை அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் யாழ் முதல்வர் ஆகியோர் முஸ்லிம் மக்களுடன் இணைந்து மேற்கொண்டனர்.
அப்போது, என்ன நடந்தாலும் வீட்டுத் திட்டத்தை அமைத்து தருவேன் என யாழ் முதல்வர் அடித்துக் கூறியிருந்தார்.
கடந்த முறை பிரதமர் யாழ் வந்தபோது நடந்த அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில், வீடு தேவையானவர்களின் உண்மையான பதிவை விட அதிக தொகையை ரிசாத் தரப்பு குறிப்பிடுவதை யாழ் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அந்த பகுதியிலுள்ள தமிழ் சட்டத்தரணியொருவர் இந்த காணியை விற்பனை செய்திருந்தார். குடியேற்றம் அமைப்பதற்காக இந்த காணியை முஸ்லிம் பிரமுகர் ஒருவர் கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமைச்சர் ரிசாத்தை பாராட்ட வேண்டும் தன் இனத்திற்காக எத்தனை தடைகளையும் தாண்டி சாதனை படைத்துள்ளார் கூட்டமைப்பை வைத்தே இதனை சாதித்துள்ளார்.
2009இன் பின் தமிழர் தவிர மற்ற அனைத்து இனத்திற்கும் தலைவர்கள் உள்ளனர் இது தான் தமிழர்களின் அவலம்.
வடக்கு - கிழக்கிற்கு அனுமதித்த 60 000வீடுகளை கட்டுவதை நிராகரித்து பல வியாக்கியானங்களைக் கூறும் கூட்டமைப்பு இந்த முஸ்லீம் வீட்டுத் திட்டத்திற்கு இராஜதந்திரம் என பெயரிடும்.
எது எப்படியோ முஸ்லீம்களிற்கு பற்றுள்ள தலைவர்கள் உள்ளனர் எமக்கு சுயநல தலைவர்கள் என யாழ் மக்கள் ஆதங்கப் படுகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை