விரைவில் பலாலி விமான நிலைய சேவைகள்!!
பலாலி விமான நிலையத்திலிருந்து 70 முதல் 80 ஆசனங்களை கொண்ட விமானங்கள் மூலம் இந்தியாவுக்கான விமான சேவைகள் இம் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளா் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
பலாலி விமான நிலையத்தில் இரண்டு மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அவை இம்மாத நடுப்பகுதியில் முடிவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து முதல் கட்டமாக டேபேர் புரெப் என்னும் 70 முதல் 80 ஆசனங்களை கொண்ட ஏ.ரி.ஆர்.72 ரக சிறிய விமானங்கள் இந்தியாவின் பிராந்திய விமான நிலையங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்தவகையில் ரத்மலானை, மட்டக்களப்பு, மற்றும் இந்தியாவின் முக்கிய புதுடெல்லி, மும்பை, கொச்சின், ஐதராபாத் நான்கு நகரங்களுக்கிடையில் விமான சேவை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் இதையடுத்து விமான நிலையத்தின் இரண்டாம் கட்டமான பிராந்திய விமான நிலையமாக்கும் அபிவிருத்திப் பணிகள் 20 பில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அந்த பணிமுடிவடைந்ததும் டோபோ ஜெட் எனினும் 150 முதல் 250 ஆசனங்களைக் கொண்ட ஏ - 320 மற்றும் ஏ - 321 ரக விமானங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விமானங்களுக்கான ஓடுபாதை 3200 மீற்றருக்கு குறையாது இருக்க வேண்டும் எனக்கூறிய அவர், பலாலி விமான நிலையத்திலிருந்து மாலைதீவு , இந்தோனேசியா மற்றும் இந்தியா பிராந்தியங்களுக்கு விமான சேவை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த இரண்டாம் கட்ட விமான நிலைய அபிவிருத்திப் பணி எதிர்வரும் நவம்பர் - டிசம்பர் பகுதியில்
ஆரம்பமாகுமென எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் அமைச்சின் செயலாளா் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
இதற்கான அபிவிருத்தி பணிக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கவுள்ளதோடு, இரண்டாம் கட்டப் பணி முடிவடைந்த பின்னரே பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக்கும் மூன்றாம் கட்டப்பணி முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை