14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்!!
யாழ்ப்பாண மானிப்பாயில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 62 வயது முதியவர் மானிப்பாய் பொலிஸாறால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முத்துதம்பி வீதி மானிப்பாய் பகுதியில் வசிக்கும் 62 வயதுடைய நாகலிங்கம் யோகராசா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது வீட்டிற்கு தனது நண்பனின் மகளான 14 வயது சிறுமிக்கு இனிப்பு வகைகளை பெற்றுக்கொடுத்து சிறுமியை தனது இச்சைக்கு பயன்படுத்தி வந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சுகயீனம் அடைந்திருந்த குறித்த சிறுமி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தபோது சிறுமி கர்ப்பமடைந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் பின்னர் சிறுமியிடம் பொலிஸார் விசாரணை செய்துள்ளனர். விசாரணையின் போது சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார். சிறுமியின் வாக்கு மூலத்தின் பிரகாரம் துஸ்பிரயோகம் செய்த நபரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்த நபரை நாளை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை