"வரும் முன் காப்போம்"டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் - ஸ்ரீராமபுரம்.!!
மேற்படி வேலைத்திட்டமானது கிராமபாதுகாப்பு குழு, மற்றும் கிராமிய டெங்கு ஒழிப்பு குழு, ஸ்ரீராமபுரம் கிராம அபிவிருத்திச்சங்கம் , பாடசாலை நிர்வாகம் ஆகியவற்றின்
iஎண்ணக்கருவில் 888i 03.10.2019 ம் திகதியன்று காலை 8.30 மணி தொடக்கம் காலை 9.45 மணிவரை கிராம மட்ட உத்தியோகத்தர்கள் ,கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் உறுதுணையுடன் சிறப்பாக நெறிப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் எமது ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலய மாணவச்செல்வங்கள் கற்றுத்தேர்ந்த ஆரோக்கியமான வாழ்வுக்கான சுகாதார முறைகளை எமது கிராம மக்களுக்கு தெளிவாக அறிவுறுத்தியதையும் டெங்கு பரவக்கூடிய அபாயகரமான இடங்களையும் அடையாளப்படுத்தி வீட்டு உரிமையாளர்கள் மற்றும் சமுர்த்தி குழுவினருடன் இணைந்து அவற்றை அப்புறப்படுத்தும் நடவடிக்கையிலும் திறம்படவும், மிக ஆர்வத்துடன் செயற்பட்டதனையும் நேரடியாக அவதானிக்க கூடியதாக இருந்தது. அத்துடன் எமது பகுதியில் டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான இடங்களும் அவதானிக்கப்பட்டிருந்ததுடன் உரிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருந்தது.
இந்த ஆரம்ப செயற்றிட்டமானது வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு பங்களிப்பு செய்தோர் விபரம்.
1. மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் வவுனியா திரு.க.தியாகலிங்கம் ஐயா மற்றும் பணிமனை உத்தியோகத்தர்கள்.
2.கிராம அலுவலர் - காத்தார்சின்னக்குளம்
3. சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் - காத்தார்சின்னக்குளம்
4.அதிபர் மற்றும் ஆசிரியர்கள், மற்றும் மாணவச்செல்வங்கள் - திருஞானசம்பந்தர் வித்தியாலயம்.
5.பொதுசுகாதார பரிசோதகர் - காத்தார்சின்னக்குளம்
6. மகாறம்பைக்குளம் பொலிஸ் உத்தியோகத்தர்கள்.
7. ஸ்ரீராமபுரம் கிராம அபிவிருத்திச்சங்கம்.
8.சமுர்த்தி குழு மற்றும் உறுப்பினர்கள் - ஸ்ரீராமபுரம்
9. சனசமூக நிலையம் - ஸ்ரீராமபுரம்
10. உதயதாரகை விளையாட்டுக்கழகம்.
11. நலன் விரும்பிகள், சமூக ஆர்வலர்கள்.
12. வீட்டு உரிமையாளர்கள்.
மேற்படி அனைவரும் எமது கிராம பாதுகாப்புக்காக ஒன்றிணைந்து திறம்பட செயற்பட்டமைக்காக அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் எமது கிராம அபிவிருத்திச்சங்கம் பெருமை கொள்கின்றது.
குறுகிய நேரத்தில் 252 வீடுகள் பார்வையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

.jpeg
)

கருத்துகள் இல்லை