இன்று சுதந்திர கட்சியின் இறுதி தீர்மானம் -தயாசிறி ஜயசேகர!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.


குறித்த கூட்டம் இன்று இரவு ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதன்போது இறுதி தீர்மானம் எட்டப்படும் என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனியாக போட்டியிடுமா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையுமா, ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குமா என்பது தொடர்பில் இரவு இறுதி முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.