முகமூடி அணிந்து போராட ஹொங்கொங்கில்தடை!
ஹொங்கொங்கில் முகமூடி அணிந்து போராட தடை விதித்து தலைமை நிர்வாகி கேரி லாம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வார இறுதி நாளான இன்று (சனிக்கிழமை) இந்த புதிய சட்டத்தால் போராட்டம் தீவிரம் அடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹொங்கொங்கின் தன்னாட்சியில் சீனா தலையிடுவதை நிறுத்துதல், ஹொங்கொங்கிற்கு சுதந்திரமாக தேர்தல், போராட்டக்காரார்களை தாக்கிய பொலிஸார் மீது விசாரணை மேற்கொள்ளுதல், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள போராட்டக்காரர்களை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்தல் போன்ற கோரிக்கைகளுடன் நான்கு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்றுவருகிறது.
போராட்டக்காரர்கள் அனைவரும் பொலிஸார் தங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாத வகையிலும், கண்ணீர் புகை குண்டுகளின் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ள முகத்தினை முகமூடியால் மறைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஹொங்கொங்கில் முகமூடி அணிந்து போராட்டம் நடத்துவதை தடுக்கும் வகையிலான அவசர சட்டத்தை தலைமை நிர்வாகி கேரி லாம் அமுல்படுத்தியுள்ளார்.
ஹொங்கொங்கில் முகமூடி அணிந்துகொண்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போராட்டம் நடத்துபவர்களை கைது செய்ய இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை