இஸ்ரோ நிலவின் தென்துருவ ஒளிப்படத்தை வெளியிட்டது!
நிலவைச் சுற்றி வட்ட பாதையை ஆய்வு செய்துகொண்டிருக்கும் சந்திராயன் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கருவி, நிலவின் தென் துருவ பகுதியை ஒளிப்படம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கருவி சிறப்பாக செயற்பட்டு வருவதாகவும், இதன்மூலம் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் எனவும் இஸ்ரோ நம்பிக்கை வெளியிட்டிருந்தது.
இதனடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டுவந்த இஸ்ரோ ஆர்பிட்டர் கருவியின் மூலம் எடுக்கப்பட்ட ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளது.
குறித்த ஒளிப்படம் ஆர்பிட்டரில் பொருத்தப்பட்டுள்ள உயர்தர கமராவின் மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரோ, ‘சந்திரனின் மேற்பரப்பில் இருந்து 100 கி.மீ உயரத்தில் இருந்து ஆர்பிட்டர் எடுத்த படங்கள் போகுஸ்லாவ்ஸ்கி பள்ளத்தின் ஒரு பகுதியாகும், இது சுமார் 14 கி.மீ விட்டம் மற்றும் 3 கி.மீ ஆழம் கொண்டதாக அளவிடப்பட்டுள்ளது.
இவை நிலவின் தென் துருவத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ளது. இந்த படம் நிலவில் கற்பாறைகள் மற்றும் சிறிய பள்ளங்களையும் காட்டுகிறது’ என தெரிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை