கேக் வெட்டி கொண்டாடிய SLPP : நிகழ்வில் அதாவுல்லாஹ், டக்ளஸ், கருணா !📷

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்வதாக மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி யசந்த கோதாகொட நேற்று மாலை தீர்ப்பறிவித்திருந்தார்.



இந்த அறிவிப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தாப ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தடங்கல் நீங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த வெற்றியினை கொண்டாடும் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ், ஈ .பி.டி,பி தலைவர் டக்ளஸ், கருணா, வியாழேந்திரன் போன்ற சிறுபான்மை இன தலைவர்களும் பங்கேற்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.