தேசிய கராத்தே போட்டிக்கு வடக்கு மாகாணத்திலிருந்து தெரிவான வீர, வீராங்கனைகள்!!
வடக்கு மாகாணத்திலிருந்து தேசிய கராத்தே சுற்றுப்போட்டிக்கு வீர, வீராங்கனைகள் தெரிவாகியுள்ளார்கள்.
வடக்கு மாகாண கராத்தே போட்டி கடந்த மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்குபற்றியிருந்தார்கள். இதில் Jaffna Katate School (J.K.S) கழக மாணவ, மாணவியர் 39 தங்கம், 26 வெள்ளி மற்றும் 20 வெண்கலம் என மொத்தமாக 85 பதங்கங்களை வென்றனர். அந்தவகையில், றொசிஹரிந் இரண்டு தஙகப் பதக்கங்கள் (21 வயதுக்கு மேற்பட்ட கறுப்புபட்டி காட்டா மற்றும் கறுப்புபட்டி குமித்தே பிரிவில்), தேசிந்தன் 21 வயதுக்கு மேற்பட்ட பிறவுன் பட்டி காட்டா பிரிவில் தங்கப்பதக்கமும் குமித்தே பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார். றேமஜன் 17 வயதுக்கான குமித்தே பிரிவில் தங்கப் பதக்கமும், காட்டா பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.
மேலும், 21 வயதுக்கு மேற்பட்ட அணியில் இருந்து ஜெபபிரியா, தர்சிகா, முபீசன், அனுராங்கன், கபிலன், ஆசாத்கவி, சேயோன், அருள்விதுசன், தனுசன், கேதீஸ்வரன் மற்றும் அபிராமி ஆகியோர் பதக்கங்களை வென்றனர். அத்துடன், 6-13 வயதுப்பிரிவில் கம்சிகாயினி, அக்சரா, தீபிகா, பிதுர்சா, தர்மிகா, நிந்துஜா, சங்கவி, பிரஷா, தேனுஜா, சிபானி, சஜனி, ஆருக்ஷா, ஹர்ஷான்ன், வேனுஷன், சுவேதன், பிரவீன்ன், சதுஷன், நிவேதன், கலியுகன், திலக்சன், சேவிதன், கபிலாஷ், சாருஜன், திருசன், மாணிக்கவாசகர், கிசோன், பிருந்தாவன் மற்றும் பிரியங்கன் ஆகியோர் பதக்கங்களை வென்றனர். இதேவேளை, 17-21 வயதுப் பிரிவில் பிருந்தாபன், சிறீராம், ஆதித்தன் மற்றும் கபிலன் ஆகியோரும், 17-16 வயது பிரிவில் வித்தியா, சஞ்சய், மதீசன், தேனுஜன், பிரசாந்தன் ஆகியோரும் பதக்கங்களை வென்றனர். இவர்களுக்கான பயிற்சிகளை சென்சை எந்திரி.றொசிஹரிந் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை