ஒபாமா – மிஷேல் தம்பதி சிங்கப்பூர் விஜயம்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பெராக் ஒபாமாவும், அவரது பாரியார் மிஷெல் ஒபாமாவும் எதிர்வரும் டிசம்பர் மாதம் சில பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நோக்கில் சிங்கப்பூருக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

குறித்த நிகழ்ச்சிகளில் பங்குபற்றுபவர்களுடன் தங்கள் அனுபவங்களை அவர்கள் பகிர்ந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி ஒபாமா சிங்கப்பூரில் இடம்பெறும் வர்த்தகப் பொது நிகழ்ச்சியில் முதன்முறையாக கலந்துகொள்ளவுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருந்த போது பெற்ற அனுபவம், தலைமைத்துவம் குறித்த தமது சிந்தனைகள் ஆகியவற்றை அவர் பகிர்ந்துகொள்வார் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
குறித்த நிகழ்ச்சி டிசம்பர் 16 ஆம் திகதி சிங்கப்பூர் EXPO வில் காலை முதல் மதியம் வரை நடைபெ​றவுள்ளது.
இதன்போது, சிங்கப்பூர் அரசியல் தலைவர்களுடன் உயர்நிலைக் கலந்துரையாடலும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மிஷேல் ஒபாமாவும் தமது வாழ்வை வடிவமைத்த தனிப்பட்ட மற்றும் பொதுத் தருணங்கள் குறித்து அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவுள்ளார்.
அமெரிக்காவின் முதல் பெண்மணியாக விளங்கிய அனுபவத்தை அவர் எடுத்துரைப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது நிகழ்ச்சி டிசம்பர் 14 ஆம் திகதி சிங்கப்பூர் EXPOவில் இரவு இடம்பெறவுள்ளது.
இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள கட்டணம் அறவிடப்படும் என்று ஏற்பாட்டு நிறுவனமான The Growth Faculty தெரிவித்துள்ளது.

Powered by Blogger.