நாளாந்த வருமானம் 100,000 ரூபா!!
கடந்த சில தினங்களின் முன்னர் கொள்ளுப்பிட்டியில் பொலிசார் சுற்றிவளைத்த விபச்சார விடுதியில் கைது செய்யப்பட்ட தாய்லாந்து அழகிகளின் நாளாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபா என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தி, பொலிசார் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் விபச்சார விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வவுனியா, யாழ்ப்பாணம் வரை அவை எட்டிப்பார்த்து, இங்கிருந்து பின்னர் அவரை இல்லாமலாக்கப்பட்டன. ஆனால், ஓரிரண்டு இயங்குவதாக அரசல்புரசலாக தகவலுண்டு.
இந்தநிலையில், கொள்ளுப்பிட்டியிலுள்ள மசாஜ் நிலையமொன்றை அண்மையில் பொலிசார் சுற்றிவளைத்தனர். மசாஜ் நிலையமென்ற போர்வையில் இயங்கிவந்த அந்த விபச்சார விடுதியில் கைதான அழகிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில காலமாகவே இயங்கி வரும் அந்த விடுதியில் சுமார் 25 தாய்லாந்து அழகிகள் பணிபுரிகின்றனர். வாடிக்கையாளர்களின் வரவை பொறுத்து அவர்கள் விடுதியில் தங்கியிருப்பார்கள். சராசரியாக ஒவ்வொரு அழகியும் நாளாந்தம் 100,000 ரூபா சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளனர். சம்பவதினத்தில் முகாமையாளரான சிங்களப் பெண்ணும், இரண்டு தாய்லாந்து அழகிகளும் கைதாகியிருந்தனர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய குற்றவியல் புலனாய்வு பிரிவின் சப் இன்ஸ்பெக்டர் சனக கமராச்சிக்கு இந்த நிலையம் குறித்த இரகசிய தகவல் கிடைத்திருந்தது. கொள்ளுப்பிட்டி கடற்கரைக்கு அருகில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு சூப்பர் மசாஜ் மையம் என்ற போர்வையில் ஒரு சட்டவிரோத விபச்சார விடுதி நடத்தப்பட்டு வருவதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிலநாட்கள் அந்த விடுதியை கண்காணித்த பொலிசார், கொள்ளுப்பிட்டி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பிரியதர்ஷன சில்வாவுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, அந்த விடுதியை முற்றுகையிட பொலிசார் தீர்மானித்தனர்.
சம்பவதினத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இளம் தொழிலதிபராக மாறுவேடமிட்டு அந்த நிலையத்திற்கு சென்றார்.
மசாஜ் நிலையத்திற்குள் நுழைந்த இளம் தொழிலதிபரை, தாய்லாந்து அழகியொருவர் வரவேற்றுள்ளார். அவர் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தார். தொழிலதிபரின் தேவை குறித்து விசாரித்தார். தாய்லாந்து யுவதியொருவரிடம் மசாஜ் செய்யவிரும்புவதாக பொலிஸ்காரர் குறிப்பிட்டார்.
மசாஜ் கட்டணமாக 6,000 ரூபா அறவிடப்படும் என்றும், அழகிகளை வாடிக்கையாளரே தேர்வு செய்யலாமென்றும் வரவேற்பாளர் குறிப்பிட்டார். பணத்தை செலுத்திய தொழிலதிபர், அழகியொருவரின் படத்தை தேர்வு செய்து, அவருடன் அறையொன்றிற்குள் சென்றார்.
அந்த தாய்லாந்து அழகிக்கு ஆங்கிலம், சிங்களம் தெரியாது.
எனினும், தனக்கு தெரிந்த ஓரிண்டு வார்த்தைகளில் மசாஜ் தவிர்ந்த வேறு சேவைகள் தேவைப்பட்டால் 10,000 ரூபா செலுத்தி பெற்றுக்கொள்ளலாமென தெரிவித்தார். எனினும், தன்னிடம் 9,000 ரூபா பணமே இருப்பதாக தொழிலதிபர் தெரிவித்தார்.
இதற்கு சம்மதித்தார் அழகி.
இதன்போது, தனது கையடக்க தொலைபேசியில் இருந்து பொலிசாருக்கு குறுந்தகவல் வழங்கினார் தொழிலதிபர்.
வெளியில் சிவில் உடையில் நின்ற பொலிசார், அதிரடியாக விடுதிக்குள் நுழைந்த விசாரணை மேற்கொண்டனர். வரவேற்பாளராக பணிபுரிந்த தாய்லாந்து அழகியிடம் விசாரணை நடத்தினர். இதன்படி, தொழிலதிபருடன் நிர்வாணமாக இருந்த தாய்லாந்து அழகியும், முகாமையாளரான சிங்களப் பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
சுற்றுலா விசாவில் இலங்கை வந்த தாய்லாந்து அழகிகளே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பொலிசார் நடத்திய விசாரணையில், மசாஜ் விடுதிக்குள் நுழைவுக்கட்டணமாக 6,000 ரூபா செலுத்த வேண்டியதும், தாய்லாந்து அழகிகளுடன் உல்லாசமாக இருக்க 30,000 ரூபா செலுத்த வேண்டுமென்பதும் தெரிய வந்தது. கைதான தாய்லாந்து அழகிகள் தமது நாளாந்த வருமானம் சுமார் 100,000 ரூபா என தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை