வந்தவுடன் முதல் வேலை 1000 ரூபாதான்:பூண்டுலோயாவில் கோட்டா!!
(நிருபர் நீலமேகம் பிரசாந்த்.)
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நேற்றைய தினம் (23/10/2019) பூண்டுலோயா நகர மைதானத்தில் பொதுஜன பெரமுனவின் பிரசார கூட்டம் இடம்பெற்றது.
கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்,
ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து நான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றவுடன் முதல் வேலை பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபாயை பெற்றுக்கொடுப்பது.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தல் மற்றும் உலக சந்தையில் 4வது இடத்தில் இருக்கும் தேயிலையை முதலாவது இடத்திற்கு கொண்டுவருவேன். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் அபிவிருத்தியடைந்த நாட்டை சீர்குலைத்த வைத்துள்ளனர். நாட்டை மீண்டும் அபிவிருத்தி பாதைக்கு கொண்டுசெல்வேன்.
யுத்தத்தை ஆரம்பித்தவர்கள் எதிர்கட்சியினர். யுத்தத்தை முடித்தவர்கள் நாங்கள். 30வருடமாக யுத்தத்தை முடிக்காமல் நாட்டை பாதாளத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் நாங்கள் எவ்வித பிரச்சினையுமின்றி முடித்துள்ளோம். தமிழ்,சிங்கள பேதமின்றி அனைவரையும் ஒன்றிணைத்துள்ளோம். இனியும் அவ்வாறே காணப்படும். எனக்கு ஆதரவளித்தவர்கள் அளித்த கோரிக்கையை முழுவதும் நிறைவேற்றுவேன் என குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை