நீ தொடுத்த அம்புகள்..!!
விரிந்த புருவ வில்லெடுத்து
வீரிய விழிக் கணைதொடுத்து
குவிந்த இதழ் குறிவைத்து
குவியும் வார்த்தைகளால்
குறியது தவறாமல் நீ
தொடுத்த அம்புகள்...
விரிந்த என் நெஞ்சத்தால்
விருட்டென்று உள்நுழைந்து
பிரிந்த வழிப் பாதைகொண்டு
பிசகாமல் இதயத்தைப்
பிளந்து சென்றதடி..
வழிந்தோடுஞ் செங்குருதி
வற்றாத ஆறாகி
நிமிர்ந்த என்னுடலை
நிலைகுலையச் செய்தாங்கே
நெடுஞ்ஞாண்கிடையாக
நிலத்தில் வீழச் செய்ததடி..
விழுந்தவுயிர் பிரியுமுன்னே
மருந்தாக நீவந்து
மறுவார்த்தை பேசிவிட்டால்..
பிளந்த என்னிதயத்துள்
பிரியமான உன்வருகை
எழுந்து நடமாடச் செய்துவிடும்
விரைந்து நீ நுழைந்துவிடு..!
தம்பலகமம் கவிதா.
வீரிய விழிக் கணைதொடுத்து
குவிந்த இதழ் குறிவைத்து
குவியும் வார்த்தைகளால்
குறியது தவறாமல் நீ
தொடுத்த அம்புகள்...
விரிந்த என் நெஞ்சத்தால்
விருட்டென்று உள்நுழைந்து
பிரிந்த வழிப் பாதைகொண்டு
பிசகாமல் இதயத்தைப்
பிளந்து சென்றதடி..
வழிந்தோடுஞ் செங்குருதி
வற்றாத ஆறாகி
நிமிர்ந்த என்னுடலை
நிலைகுலையச் செய்தாங்கே
நெடுஞ்ஞாண்கிடையாக
நிலத்தில் வீழச் செய்ததடி..
விழுந்தவுயிர் பிரியுமுன்னே
மருந்தாக நீவந்து
மறுவார்த்தை பேசிவிட்டால்..
பிளந்த என்னிதயத்துள்
பிரியமான உன்வருகை
எழுந்து நடமாடச் செய்துவிடும்
விரைந்து நீ நுழைந்துவிடு..!
தம்பலகமம் கவிதா.
கருத்துகள் இல்லை