காரைநகரில் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கப்பட்டன!📷

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் நிதி உதவியுடன் காரைநகரில்
கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளைப் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு (10.10.2019) வியாழக்கிழமை இடம்பெற்றது.

காரைநகர் பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேற்படி அமைச்சின் செயலாளர் திரு. வே.சிவஞானசோதி கலந்துகொண்டு வீடுகளைத் திறந்துவைத்து பயனாளிகளிடம் கையளித்தார்.

2019 ஆம் ஆண்டு வீடுகளைக் கட்டி முடிவுறுத்திய ச.சிவகுமார், வே.இந்திரன், ஜீ.கலைச்செல்வி, ஜெ.இன்பராணி, ம.ஐங்கரன் ஆகிய ஐந்து பயனாளிகளின் வீடுகள் நேற்று கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிரதரன் (காணி), காரைநகர் பிரதேச செயலக திட்ட இணைப்பாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், மேற்படி அமைச்சின் பிரநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.