குர்துகளுக்கு எதிரான யுத்தத்தை தொடங்கி விட்டது துருக்கி.!

வடக்கு சிரியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் குர்து படைகள். குர்து தேசியத்தின் நிலப்பரப்பை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர்க்கு எதிராகவும் சிரிய இராணுவத்துக்கு எதிராகவும் போராடி மீட்டெடுத்தது குர்து படைகள்
தற்காலிக அரசையும் நிறுவி ஆட்சியும் நடத்தி வந்த சூழலில் துருக்கி இராணுவம் சிரிய தேசிய இராணுவத்துடன் இனைந்து சிரிய எல்லைக்குள் நுழைந்துள்ளது. "அமைதி வசந்தம் "என்று பெரியரிடப்பட்டுள்ள துருக்கியின் இந்த இராணுவ நடவடிக்கை பெரும் பிரளயத்தை ஏற்படுத்தப் போவது உறுதி.
துருக்கி நடத்திய விமான மற்றும் ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள குர்து இன மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். குர்து படைகளுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க இராணுவமும் குர்து இராணுவ நிலைகளிலிருந்து வெளியேறி விட்டது. 


எந்த சூழலிலும் குர்துகளை கைவிட மாட்டோம் என்று கூறி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது துருப்புகளை குர்துகளின் இராணுவ நிலைகளிலிருந்து வெளியேற உத்தவிட்டு துருக்கி இராணுவத்தின் தாக்குதல் நடவடிக்கைக்கு வழி ஏற்படுத்தி உள்ளார். அமெரிக்க இராணுவம் சிரிய நிலப்பரப்பை விட்டு இன்னும் அகலவில்லை எனினும் குர்துகளுக்கு எதிரான தாக்குல்களை ஆரம்பித்து விட்டது துருக்கி.தற்போது குர்து படையினர் தனித்து விடப்பட்டு உள்ளனர்.
எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத நிலையிலும்
துருக்கி மற்றும் சிரிய இராணுவத்தின் தாக்குதல்கள் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாத நிலையிலும் குர்தீஸ் போராளிகள் தமது முன்னரங்கை பலப்படுத்தி கொண்டு எதிர் கொள்ள தயாராக உள்ளனர்.

 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.