இந்த மௌனத்தோடு என்னை கொன்றுவிட்டு போ!!


நீ
இப்போதெல்லாம் என்னை நேசிக்கவில்லை என்று சொல்வதை விடவும் உன்மௌனம்கொல்கிறதுஎன்ன செய்வது
உன்னை தவிர என் மனதுக்கு
எதுவும் தெரியாத போது
நீ
இன்னமும்
என்னையே நேசித்துக்கொள்வதாய்
கற்பனையிலாவது வாழ்கிறேன்

என்றாவது
என்னிடமிருந்து தொலைய நினைத்தால்
சொல்லிவிடாதே எதுவுமே

நான் செத்துவிடுவேன் மறுபடியும்

போன பின் திரும்பி பார்த்தும் விடாதே
நான் இல்லாமலும் இருக்கலாம்
இருந்த இடங்களில்

காத்திருந்த கால்தடங்களை கூட
மறுபடி தேடிவிடாதே
என் ஆத்மா விடும் கண்ணீர்
உன்னை உடைத்துவிடக்கூடாது

#பேனா

Powered by Blogger.