லஞ்சம் வாங்கும்போது வசமாக மாட்டிய அதிகாரி!

திருகோணமலை- குச்சவெளி பகுதியில் லஞ்சம் வாங்குவதில் பிரபல்யமான சமுா்த்தி உத்தியோகஸ்த்தா் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.


சமுர்த்தி உரித்து பத்திரம் வழங்குவதாக கூறி இரு பயனாளிகளிடம் இருந்து 8,000 ரூபாய் பணத்தை வாங்கும் போது சந்தேகநபர் லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவிரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 42 வயதான டேவிட் மில்ரோய் ராஜன் என்பவரே இவ்வாறு லஞ்சம் வாங்கும்போது சிக்கியுள்ளார்.

குச்சவெளி - காசிம் நகர் பகுதியைச் சேர்ந்த சமுர்த்தி பயனாளிகள் கொடுத்த முறைப்பாட்டையடுத்து லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு சென்று சமுர்த்தி உத்தியோகத்தரை கைது செய்துள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் ஏற்கனவே குச்சவெளி பிரதேச செயலாளருக்கு முறைப்பாடுகள் கிடைக்க பெற்றதையடுத்து பிரதேச செயலாளர் குறித்த அதிகாரியை எச்சரித்திருந்ததாகவும் பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த அதிகாரி திருகோணமலை பிரதேச செயலகம் மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலகங்களில் கடமையாற்றி வந்த நிலையில் அங்கும் இவ்வாறான முறைகேடுகளில் ஈடுபட்டதனால் குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.