இளவயதினரைப் பாதிக்கும் சமூக ஊடகங்கள்!!

சமூக ஊடகங்கள் பதின்மவயதுப் பெண்பிள்ளைகளின் நல்வாழ்வில் சிறிய தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன என்று அரசாங்கத்தின் தேசிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மாறாக நண்பர்களைப் பார்ப்பது பதின்மவயதுப் பெண்பிள்ளைகளின் மனநலனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் இளவயதினர் நித்திரையை இழத்தல் அல்லது இணையத்தளம் மூலமாக கொடுமைப்படுத்தப்படல் ஆகியனவே அவர்களின் மன ஆரோக்கியத்தை பெரிய அளவில் பாதிக்கின்றது என்றும் சமூக ஊடகங்களை விட எட்டுமடங்கு பாதிப்பு கொடுமைப்படுத்தப்படுவதால் ஏற்படுகின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இளவயதினரின் மகிழ்ச்சி நிலைகளைப் பிரதிபலிப்பதாக அரசாங்கத்தின் தேசிய அறிக்கையானது அமைந்துள்ளது.

இளவயதினரின் நல்வாழ்வில் சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து தொடர்ந்து விவாதங்கள் இருந்தபோதிலும், உளவியல் ஆரோக்கியத்துடன் வலுவான தொடர்பு இல்லை என்று அறிக்கை பரிந்துரைக்கின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.