ட்ரம்புக்கு எதிரான விசாரணை அவசியம் – முன்னாள் உப ஜனாதிபதி!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான குற்றப்பிரேரணை மீதான விசாரணைகளுக்கு, முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடன் முதல் தடவையாக அழைப்பு விடுத்துள்ளார்.


இதேவேளை, ஜனாதிபதி ஏற்கனவே தன்னைத்தானே தண்டித்துக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக ஜோ பைடன் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜோ பைடன் மற்றும் அவரது மகள் மீதான பகிரங்க விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான அழுத்தங்களை உக்ரைன் ஜனாதிபதி மீது பிரயோகித்த பின்னணியில், அமெரிக்க ஜனாதிபதி செயற்பட்டாரா என்பது தொடர்பாக கண்டறிவதற்காக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், விசாரணைகளில் ஒத்துழைப்பு வழங்க முடியாது என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.