தியாகத்தின் தாய் பெண்ணென்ற புலியின் புன்னகை உறுமல்!!

மாலதி எனும் விருட்சம்
ஈழ ஆதியில் சனித்த புரட்சி


வற்றாத புயலாய் நினைவுகளில் ஒளிர்கிறாள்

வெள்ளிதிசை நோக்கிய வேள்வியின் முதல் வித்து

சொத்தான வாழ்வை துறந்து
முத்தான தலைவனின் பாதையில்
விளைந்த வீரத் தரு

ஒப்பற்ற தியாகத்தின் தாய்
பெண்ணென்ற புலியின்
புன்னகை உறுமல்

காலச் சுவடுகளில்
அவள் கனவுகள் கரைவதில்லை

வானக் குடைகளிலே
அவள் கண்கள் அணைவதில்லை

பற்றிடும் வேட்கையின்
அழியா நாமம் மாலதி
அவள் என்றும் நிலைப்பாள்
தமிழர் நெஞ்சின் பூவிழி

விருட்சமாய் வளர்ந்த
சோலையை சோகத்தில்
ஆழ்த்தியவர் யார்

பூக்களாய்க் கூடிய
கூட்டைக் கலைத்தவர் யார்

பாக்களாய் ஆனந்தித்த பொழுதை பொசுக்கியவர் யார்

நாட்களாய் நாளும் நீளும் அவளை அழிப்பவர் யார்

மீண்டும் பிறப்பாள் மாலதி எனும் மங்கை
அன்று வெளிப்பாள்
ஈழம் எனும் நங்கை

-த.செல்வா-
10.10.2019
தாயகம் 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.