தொண்டமானின் கோட்டையில் சரிவு!!

இ.தொ.காவின் கொட்டகலை அமைப்பாளர் தொ.தே.சங்கத்துக்கு ஆதரவு!!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் கோட்டையாக கொட்டகலையே கருதப்படுகிறது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து தொடர்ந்து பலர் தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கொட்டகலையின் இ.தொ.கா. அமைப்பாளரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான மலர்வாசகம் இன்று அமைச்சர் திகாரம்பரத்துடன் இணைந்துக்கொண்டார்.

மலைநாட்டு அமைச்சில் சற்றுமுன்னர் அவர் நேரடியாக அமைச்சர் திகாம்பரத்தை சந்தித்து இவ்வாறு ஆதரவை வழங்கியுள்ளதாக அறிய முடிகிறது.

அவருடன் கொட்டகலையில் இ.தொ.கா முக்கிய பிரமுகர்கள் 16 பேரும் தொ.தே.சங்கத்துக்கு ஆதரவை வழங்கியுள்ளனர்.

No comments

Powered by Blogger.